caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:32

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًا لَّكُمْ وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ لِتَجْرِىَ فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ وَسَخَّرَ لَكُمُ ٱلْأَنْهَٰرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; வானத்தில் இருந்து மழையை இறக்கி, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக கனிகளில் (பலவற்றை) வெளிப்படுத்துபவன்; உங்களுக்கு கப்பலை அவனுடைய கட்டளையைக் கொண்டு கடலில் செல்வதற்காக வசப்படுத்தியவன்; உங்களுக்கு ஆறுகளை வசப்படுத்தியவன்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; இன்னும், வானத்தில் இருந்து மழையை இறக்கி, அதன் மூலம் உங்களுக்கு உணவாக கனிகளில் (பலவற்றை) வெளிப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு கப்பலை அவனுடைய கட்டளையினால் கடலில் செல்வதற்காக வசப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு ஆறுகளை (நீங்கள் அவற்றிலிருந்து பயனடைவதற்காக) வசப்படுத்தி கொடுத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்துகிறான். (நீங்கள் பயணம் செய்யும் பொருட்டுத்) தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும், (கால்வாய்களையும்) உங்கள் விருப்பப்படி பாய வசதியளித்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70