caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:31

قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خِلَٰلٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; அதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாக நாம் அவர்களுக்கு வசதியளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யட்டும்.
Tamil Translation - Omar Sharif(நபியே! என் மீது) நம்பிக்கைகொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்யட்டும் ஒரு நாள் வருவதற்கு முன்னதாக. அந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் இருக்காது.”
Tamil Translation - Abdulhamid Baqawi31. (நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னதாகவே இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யட்டும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70