وَجَعَلُوا۟ لِلَّهِ أَندَادًا لِّيُضِلُّوا۟ عَن سَبِيلِهِۦ قُلْ تَمَتَّعُوا۟ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى ٱلنَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அல்லாஹ்விற்கு (பல) இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர் அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக. (நபியே!) கூறுவீராக! “(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக உங்கள் மீட்சி நரகத்தின் பக்கம்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு (பல) இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர். (அதன்) நோக்கம், அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதாகும். (நபியே!) கூறுவீராக! “(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக உங்கள் மீளுமிடம் நரகத்தின் பக்கம்தான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi30. அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு (பல பொய் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான்.