وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا وَاقٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் பாதுகாவலரும் எவரும் இல்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். இன்னும், உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் இருக்க மாட்டார், இன்னும் பாதுகாவலரும் இருக்க மாட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. (நபியே! நீர் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்ட திட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கிவைத்தோம். ஆகவே, (வஹ்யியின் மூலம்) உமக்கு (திருகுர்ஆனின்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடத்தில் (உம்மை) பாதுகாத்துக் கொள்ளவோ, உமக்கு உதவி செய்யவோ ஒருவருமிரார்!