caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 69

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:69

وَلَمَّا دَخَلُوا۟ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيْهِ أَخَاهُ قَالَ إِنِّىٓ أَنَا۠ أَخُوكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (அணைத்து)க் கொண்டார். “நிச்சயமாக நான்தான் உம் சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி வேதனைப் படாதே!” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifமேலும், அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (-தன்னுடன் அணைத்து)க் கொண்டார். இன்னும், “நிச்சயமாக நான்தான் உனது சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி கவலை படாதே! (சங்கடப் படாதே!)” என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi69. அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உமது சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்'' என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உம்மை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70