فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ جَعَلَ ٱلسِّقَايَةَ فِى رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلْعِيرُ إِنَّكُمْ لَسَٰرِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தியபோது தன் சகோதரனின் சுமையில் குவளையை வைத்தார். பிறகு, ஒரு அறிவிப்பாளர் “ஓ! பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று அறிவித்தார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தி கொடுத்தபோது தன் சகோதரனின் சுமையில் (அளப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற) குவளையை வைத்து விட்டார். பிறகு, ஓர் அறிவிப்பாளர் “ஓ! (தானிய) சுமைகளை ஏற்றி செல்லும் பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று அறிவித்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi70. பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன் சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்து விட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) ‘‘ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்'' என்று சப்தமிட்டான்.