فَلَمَّا رَجَعُوٓا۟ إِلَىٰٓ أَبِيهِمْ قَالُوا۟ يَٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَآ أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட மேல் அதிகம் கொடுக்க) எங்களுக்கு அளவை தடுக்கப்பட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்பவர்கள்தான்” என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது, “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட அதிகமான உணவு) அளவை எங்களுக்கு (கொடுக்கப்படாமல்) தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (அதிக தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi63. (தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவைப்பீராக. நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்'' என்று கூறினார்கள்.