caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 62

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:62

وَقَالَ لِفِتْيَٰنِهِ ٱجْعَلُوا۟ بِضَٰعَتَهُمْ فِى رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பின்னர் யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வையுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பினால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும். (ஆகவே, இப்படி செய்யுங்கள்)” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifமேலும், (யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பி சென்றால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும்” என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. (பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதை அறிந்துகொண்டு (அதை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70