ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்கள் மழை பொழியப்படுவார்கள். (ஒலிவம், திராட்சை ஆகியவற்றை) பிழிவார்கள்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்கள் மழை பொழியப்படுவார்கள். இன்னும், அவர்கள் (ஸைத்தூன், திராட்சை ஆகியவற்றை) பிழி(ந்து எண்ணெயையும் பழரசங்களையும் உற்பத்தி செய்து கொள்)வார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi49. அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்).