قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதைவிட (நான்) சிறை(யிலிடப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. நீ என்னை விட்டு அவர்களின் சூழ்ச்சியை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் இச்சைகொள்வேன்; அறிவீனர்களில் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(யூஸுஃப்) கூறினார்: “என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதை (செய்வதை) விட (நான்) சிறை(யில் தள்ளப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. இன்னும், நீ என்னை விட்டும் அவர்களின் சதி திட்டத்தை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் ஆசைப்பட்டு விடுவேன். இன்னும், அறிவீனர்களில் ஆகிவிடுவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi33. அதற்கவர், ‘‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்.