قَالَتْ فَذَٰلِكُنَّ ٱلَّذِى لُمْتُنَّنِى فِيهِ وَلَقَدْ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ فَٱسْتَعْصَمَ وَلَئِن لَّمْ يَفْعَلْ مَآ ءَامُرُهُۥ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا مِّنَ ٱلصَّٰغِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். அவர் (தன்னை) காத்துக் கொண்டார். அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், நிச்சயமாக இழிவானவர்களில் அவர் ஆகுவார்” என்று கூறினாள்.
Tamil Translation - Omar Sharif“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான்தான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். ஆனால், அவர் (தன்னை) பாதுகாத்துக் கொண்டார். இன்னும், அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், இன்னும், நிச்சயமாக அவர் இழிவானவர்களில் ஆகிவிடுவார்” என்று (அந்த பெண்களிடம் மந்திரியின் மனைவி) கூறினாள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்.