وَرَٰوَدَتْهُ ٱلَّتِى هُوَ فِى بَيْتِهَا عَن نَّفْسِهِۦ وَغَلَّقَتِ ٱلْأَبْوَٰبَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ ٱللَّهِ إِنَّهُۥ رَبِّىٓ أَحْسَنَ مَثْوَاىَ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் எவள் வீட்டில் இருந்தாரோ அவள் (எல்லாக்) கதவுகளையும் மூடிவிட்டு அவரை (தன்) விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்து “வருவீராக” என்று கூறினாள். “அல்லாஹ்வின் பாதுகாப்பை(க் கோருகிறேன்)! நிச்சயமாக அவர் என் எஜமானர், என் தங்குமிடத்தை அழகுபடுத்தினார். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர் எவள் வீட்டில் இருந்தாரோ அவள் (எல்லாக்) கதவுகளையும் மூடிவிட்டு அவரை (தன்) விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்து, “(என்னை நோக்கி) வருவீராக” என்று கூறினாள். (அதற்கு யூஸுஃப்) கூறினார்: “அல்லாஹ்வின் பாதுகாப்பை(க் கோருகிறேன்)! நிச்சயமாக அவர் என் எஜமானர். என்னை அழகிய தங்குமிடத்தில் தங்க வைத்தார். நிச்சயமாக (நன்றி கெட்ட) அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi23. அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்.