قَالُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئْبُ وَمَآ أَنتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் எங்கள் பொருளிடம் யூஸுஃபை விட்டுவிட்டு நாங்கள் அம்பெறிந்தவர்களாக சென்றோம். (அப்போது) அவரை ஓநாய் தின்றது. நாங்கள் (சந்தேகப்பட முடியாத) உண்மையாளர்களாக இருந்தாலும் எங்களை நீர் நம்புபவராக இல்லை” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் (அம்பெறிவதிலும் ஓட்டப்பந்தயத்திலும்) போட்டியிட்டவர்களாக சென்று கொண்டிருந்தோம். இன்னும், எங்கள் பொருளுக்கு அருகில் யூஸுஃபை விட்டு வைத்திருந்தோம். ஆக, (அப்போது) அவரை ஓநாய் (அடித்து) தின்று விட்டது. நாங்கள் (அல்லாஹ்விடம்) உண்மையாளர்களாக இருந்தாலும் நீரோ எங்களை நம்பக்கூடியவராக இல்லை(யே).”
Tamil Translation - Abdulhamid Baqawi17. ‘‘எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.