caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:15

فَلَمَّا ذَهَبُوا۟ بِهِۦ وَأَجْمَعُوٓا۟ أَن يَجْعَلُوهُ فِى غَيَٰبَتِ ٱلْجُبِّ وَأَوْحَيْنَآ إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அவரைக் கொண்டு சென்றபோது, அவரை கிணற்றின் ஆழத்தில் ஆக்கி விட அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர். “அவர்களுடைய இந்த காரியத்தை (பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக அறிவிப்பீர், (இதை இப்போது) அவர்கள் உணர மாட்டார்கள்” என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் அவரை அழைத்து சென்றபோது, இன்னும், அவரை கிணற்றின் ஆழத்தில் தள்ளிவிட அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தபோது, “அவர்களுடைய இந்த காரியத்தை (பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக நீர் அறிவிப்பீர். (இதை இப்போது) அவர்கள் உணர மாட்டார்கள்” என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. (யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். ‘‘அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்'' என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70