وَكَأَيِّن مِّنْ ءَايَةٍ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை புறக்கணிப்பவர்களாகவே அவற்றின் அருகே (கடந்து) செல்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifவானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை (பார்த்து படிப்பினை பெறாமல்) புறக்கணித்தவர்களாகவே அவற்றை கடந்து செல்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi105. (இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்.