وَٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ إِنَّ رَبِّى رَحِيمٌ وَدُودٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பிறகு, திருந்தி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் பெரும் கருணையாளன், மகா நேசன் (என்று கூறினார்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பிறகு, (வருந்தி, பாவங்களை விட்டு) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் பெரும் கருணையாளன், அதிகம் அன்பு வைப்பவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi90. ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மகா கருணையுடையவன், மிக்க நேசிப்பவன் ஆவான் என்று கூறினார்.