caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 63

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:63

قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى مِنْهُ رَحْمَةً فَمَن يَنصُرُنِى مِنَ ٱللَّهِ إِنْ عَصَيْتُهُۥ فَمَا تَزِيدُونَنِى غَيْرَ تَخْسِيرٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் மக்களே! அறிவியுங்கள் நான் என் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியில் இருக்க, அவன் தன்னிடமிருந்து (மகத்தான) அருளை எனக்கு தந்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால்... அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? நஷ்டம் ஏற்படுத்துவதை அன்றி (வேறொன்றையும்) எனக்கு நீங்கள் அதிகமாக்க மாட்டீர்கள்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(அதற்கு ஸாலிஹ்) கூறினார்: “என் மக்களே! அறிவியுங்கள்: நான் என் இறைவனிடமிருந்து (நபித்துவத்தின்) தெளிவான அத்தாட்சியில் இருந்தால், இன்னும், அவன் தன்னிடமிருந்து (நபித்துவம் என்ற) அருளை எனக்கு தந்திருந்தால், (இந்த நிலையில் அவனது தூதுத்துவத்தை உங்களுக்கு எடுத்துரைக்காமல்) நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? ஆக, (நான் உங்களுக்கு மாறு செய்வதால் என்னை) நஷ்டவாளி என்று (நீங்கள்) சொல்வதை தவிர (எதையும்) எனக்கு நீங்கள் அதிப்படுத்த மாட்டீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi63. அதற்கவர் ‘‘என் மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருக்க, அவன் என் மீது (மகத்தான) அருள் புரிந்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தைத் தவிர (எதையும்) அதிகமாக்கி விட மாட்டீர்கள்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70