أَلَآ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا۟ مِنْهُ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அறிவீராக! நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகின்றனர். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் சமயம் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அறிவீராக! “நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகிறார்கள். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் நன்கறிகிறான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi5. (இந்தப் பாவிகள் தங்கள் தீய எண்ணங்களை) அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக (அவற்றைத்) தங்கள் உள்ளங்களில் (வைத்து) மடித்து மறைக்கக் கருதுகின்றனர் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக. (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் (தங்கள் உள்ளங்களில்) அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் அவன் அறிகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ள (ரகசியங்கள்) அனைத்தையும் நன்கறிந்தவன்.