caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 49

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:49

تِلْكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهَآ إِلَيْكَ مَا كُنتَ تَعْلَمُهَآ أَنتَ وَلَا قَوْمُكَ مِن قَبْلِ هَٰذَا فَٱصْبِرْ إِنَّ ٱلْعَٰقِبَةَ لِلْمُتَّقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இவை (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே, பொறுப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கே.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இவை (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே, பொறுமையாக (உறுதியுடன்) இருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கே.
Tamil Translation - Abdulhamid Baqawi49. (நபியே!) இது (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹ்யி மூலமாகவே நாம் இதை உமக்கு அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இதை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப்போல் நீரும் சிரமங்களைச்) சகித்துப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக முடிவான வெற்றி இறையச்சம் உடையவர்களுக்குத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70