وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ إِنْ أَنتُمْ إِلَّا مُفْتَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version‘ஆது’ (எனும் மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் -ஹூதை-(அனுப்பினோம்). என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (வேறு) வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு அறவே இல்லை. புனைபவர்களாகவே தவிர நீங்கள் வேறில்லை என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif‘ஆது’ சமுதாயத்திடம் அவர்களுடைய சகோதரர் -ஹூதை- (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (உங்கள் கற்பனைக்கு ஏற்ப இறைவனைப் பற்றி பொய்யை) இட்டுக்கட்டுபவர்களாகவே தவிர இல்லை..
Tamil Translation - Abdulhamid Baqawi50. ‘ஆது' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஹூதை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்.அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே.