caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 45

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:45

وَنَادَىٰ نُوحٌ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبْنِى مِنْ أَهْلِى وَإِنَّ وَعْدَكَ ٱلْحَقُّ وَأَنتَ أَحْكَمُ ٱلْحَٰكِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநூஹ் “தன் இறைவனை அழைத்து, என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன். நிச்சயமாக உன் வாக்கு உண்மையானதே, நீயே தீர்ப்பளிப்பவர்களில் மகா தீர்ப்பாளன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நூஹ் தன் இறைவனை அழைத்தார். ஆக, அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன். இன்னும், நிச்சயமாக உன் வாக்கு உண்மையானதே, இன்னும், நீயே தீர்ப்பளிப்பவர்களில் மகா நீதமான தீர்ப்பாளன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi45. (நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன் வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி'' என்று சப்தமிட்டுக் கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70