caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:44

وَقِيلَ يَٰٓأَرْضُ ٱبْلَعِى مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ ٱلْمَآءُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَٱسْتَوَتْ عَلَى ٱلْجُودِىِّ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“பூமியே! உன் தண்ணீரை விழுங்கு; வானமே! (பொழிவதை) நிறுத்து” என்று கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. (அவர்களின்) காரிய(மு)ம் முடிக்கப்பட்டது. (அக்கப்பல்) ‘ஜூதி’ மலையில் தங்கியது; அநியாயக்கார மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்” என்று கூறப்பட்டது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கூறப்பட்டது: “பூமியே! உன் தண்ணீரை விழுங்கு; இன்னும், வானமே! (பொழிவதை) நிறுத்து.” தண்ணீர் வற்றியது. இன்னும், (அவர்களின்) காரிய(மு)ம் முடிக்கப்பட்டது. (அந்த கப்பல்) ‘ஜூதி’ மலையில் தங்கியது. இன்னும், “அநியாயக்கார மக்களுக்கு அழிவுதான்” என்று கூறப்பட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi44. பின்னர் ‘‘பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்'' என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) ‘ஜூதி' (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்'' என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70