caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:46

قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيْسَ مِنْ أَهْلِكَ إِنَّهُۥ عَمَلٌ غَيْرُ صَٰلِحٍ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ إِنِّىٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلْجَٰهِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நூஹே! அவன் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. நிச்சயமாக இ(வ்வாறு கேட்ப)து நல்ல செயல் அல்ல. உமக்கு ஞானமில்லாததை என்னிடம் கேட்காதே. அறியாதவர்களில் நீர் ஆகுவதை விட்டு (எச்சரிப்பதற்காக) நிச்சயமாக நான் உமக்கு உபதேசிக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறினான்: “நூஹே! அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. நிச்சயமாக இ(வ்வாறு கேட்ப)து நல்ல செயல் அல்ல. உமக்கு ஞானமில்லாததை என்னிடம் கேட்காதீர். அறியாதவர்களில் நீர் ஆகுவதிலிருந்து (விலகி இருக்க வேண்டுமென) நிச்சயமாக நான் உமக்கு உபதேசிக்கிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi46. அதற்கவன், ‘‘நூஹே! நிச்சயமாக அவன் உமது குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உமது குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீர் உமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70