caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 35

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:35

أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ قُلْ إِنِ ٱفْتَرَيْتُهُۥ فَعَلَىَّ إِجْرَامِى وَأَنَا۠ بَرِىٓءٌ مِّمَّا تُجْرِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! உம்மைப் பற்றி) “அவர் இ(ந்த வேதத்)தைப் புனைந்தார்” என்று கூறுகிறார்களா? (அவ்வாறாயின்) கூறுவீராக! “நான் அதைப் புனைந்திருந்தால் என் மீதே என் குற்றம் சாரும். (உங்கள் மீதல்ல.) நீங்கள் புரியும் குற்றங்களை விட்டு நான் விலகியவன்.”
Tamil Translation - Omar Sharifஅல்லது, (நபியே! உம்மைப் பற்றி) “அவர் இ(ந்த வேதத்)தை தானாக இட்டுக்கட்டினார்” என்று கூறுகிறார்களா?” (அவ்வாறாயின்) கூறுவீராக! “நான் அதை இட்டுக்கட்டி இருந்தால் என் குற்றம் என்னையே சாரும். (உங்களை அல்ல.) இன்னும், நீங்கள் புரியும் குற்றங்களை விட்டும் நான் விலகியவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi35. (நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) ‘‘நீர் இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்'' என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீர் கூறுவீராக: ‘‘நான் அதைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70