وَأُوحِىَ إِلَىٰ نُوحٍ أَنَّهُۥ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ ءَامَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) நம்பிக்கை கொண்டு விட்டவர்களைத் தவிர, (இனி) உமது மக்களில் (ஒருவரும்) அறவே நம்பிக்கை கொள்ளமாட்டார். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நீர் கவலைப்படாதீர்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: “நிச்சயமாக (முன்னர்) நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, (இனி) உமது மக்களில் (ஒருவரும்) அறவே நம்பிக்கை கொள்ளமாட்டார். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நீர் துயரப்படாதீர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi36. (நபி) நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: ‘‘முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.