caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:34

وَلَا يَنفَعُكُمْ نُصْحِىٓ إِنْ أَرَدتُّ أَنْ أَنصَحَ لَكُمْ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغْوِيَكُمْ هُوَ رَبُّكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நான் உங்களுக்கு நல்லுபதேசம் புரிய நாடினாலும், உங்களை வழிகெடுக்க அல்லாஹ் நாடி இருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு பலனளிக்காது. அவன் உங்கள் இறைவன்; அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.”
Tamil Translation - Omar Sharif“இன்னும், நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், உங்களை வழிகெடுக்க அல்லாஹ் நாடி இருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு பலனளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன்; இன்னும், அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi34. ‘‘நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' (என்றும் கூறினார்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70