فَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِىَ ٱلرَّأْىِ وَمَا نَرَىٰ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍۭ بَلْ نَظُنُّكُمْ كَٰذِبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அதற்கு) அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த தலைவர்கள் “எங்களைப் போன்ற ஒரு மனிதனாகவே தவிர (தூதராக) நாம் உம்மை பார்க்கவில்லை. (எங்கள்) வெளிப் பார்வையில் எங்களில் மிக இழிவானவர்களே தவிர (மற்றவர்கள்) உம்மைப் பின்பற்றியதாக நாம் பார்க்கவில்லை. எங்களைவிட உங்களுக்கு எந்த ஒரு மேன்மையையும் நாங்கள் பார்க்கவில்லை. மாறாக, உங்களை பொய்யர்களாக கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த பிரமுகர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற ஒரு மனிதனாகவே தவிர, உம்மை நாம் (தூதராக) கருதவில்லை. இன்னும், (எங்கள்) வெளிப்படையான அறிவின்படி எங்களில் மிக இழிவானவர்களாக இருப்பவர்களே தவிர (உயர்ந்தவர்கள் எவரும்) உம்மைப் பின்பற்றுவதை நாம் பார்க்கவில்லை. இன்னும், எங்களை விட உங்களுக்கு எவ்வித மேன்மையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக, நாங்கள் உங்களை பொய்யர்களாக கருதுகிறோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi27. அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நாம் உம்மை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே தவிர (கண்ணியமானவர்கள்) உம்மைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் ஒரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. நீங்கள் (அனைவரும்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள்.