قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى رَحْمَةً مِّنْ عِندِهِۦ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنتُمْ لَهَا كَٰرِهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நூஹ்) கூறினார்: என் மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனிடமிருந்து (கொடுக்கப்பட்ட) ஒரு தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருந்து அவன் தன்னிடமிருந்து அருளை எனக்கு அளித்திருந்து, அவை (எல்லாம்) உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், நீங்களும் அவற்றை வெறுப்பவர்களாக இருக்க, அவற்றை (ஏற்றுக் கொள்ள) உங்களை நாம் நிர்ப்பந்திப்போமா?”
Tamil Translation - Omar Sharif(நூஹ்) கூறினார்: “என் மக்களே! நீங்கள் (எனக்கு) அறிவியுங்கள், என் இறைவனிடமிருந்து (கொடுக்கப்பட்ட) ஒரு தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருக்கிறேன். இன்னும், அவன் தன்னிடமிருந்து அருளை எனக்கு அளித்திருக்கிறான். ஆக, இவை (எல்லாம்) உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், நீங்களும் அவற்றை வெறுப்பவர்களாக இருக்கும் நிலையில் அவற்றை (நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி) உங்களை நாம் நிர்ப்பந்திப்போமா?”
Tamil Translation - Abdulhamid Baqawi28. (அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: ‘‘என் மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன் அருளையும் (நபித்துவத்தையும்) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் அதை நீங்கள் வெறுத்து விட்டால், அதைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?