caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:15

مَن كَانَ يُرِيدُ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَٰلَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) நாடுபவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் செயல்களுக்கு முழுமையாக கூலி தருவோம். அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஎவர்கள் (தங்களது நற்செயல்களுக்கு கூலியாக மறுமையை நாடாமல்) உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் நற்செயல்களுக்கு முழுமையாக கூலி தந்து விடுவோம். இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70