caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 114

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:114

وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَىِ ٱلنَّهَارِ وَزُلَفًا مِّنَ ٱلَّيْلِ إِنَّ ٱلْحَسَنَٰتِ يُذْهِبْنَ ٱلسَّيِّـَٔاتِ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّٰكِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவு கூருபவர்களுக்கு இது ஒரு நல்லுபதேசமாகும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) பகலின் இரு ஓரங்களிலும் (-காலை, மாலையில்), இரவின் ஒரு பகுதியிலும் (ஆக, ஐந்து நேர) தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவு கூர்பவர்களுக்கு இது ஒரு நல்லுபதேசமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi114. பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீர் (தவறாது) தொழுது வருவீராக. நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70