وَلَا تَرْكَنُوٓا۟ إِلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின் நரக) நெருப்பு உங்களை அடைந்துவிடும். அல்லாஹ்வையன்றி பாதுகாப்பவர்கள் (எவரும்) உங்களுக்கு இல்லை; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். அவ்வாறாயின் (நரக) நெருப்பு உங்களை பிடித்துக் கொள்ளும். (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர்கள் (எவரும்) உங்களுக்கு இருக்க மாட்டார்கள்; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi113. (நம்பிக்கையாளர்களே!) வரம்பு மீறுபவர்கள் பக்கம் நீங்கள் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களைப் பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.