caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 101

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:101

وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَمَآ أَغْنَتْ عَنْهُمْ ءَالِهَتُهُمُ ٱلَّتِى يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَىْءٍ لَّمَّا جَآءَ أَمْرُ رَبِّكَ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதி இழைத்தனர். உம் இறைவனின் கட்டளை வந்த போது அல்லாஹ்வை அன்றி அவர்கள் அழைக்கும் அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு சிறிதும் பலனளிக்கவில்லை; அவை அவர்களுக்கு அழிவைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தவில்லை!
Tamil Translation - Omar Sharifஇன்னும், நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். ஆக, உம் இறைவனின் கட்டளை வந்தபோது அல்லாஹ்வை அன்றி அவர்கள் அழைத்து வணங்குகின்ற அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு சிறிதும் பலனளிக்கவில்லை; இன்னும், அவை அவர்களுக்கு அழிவைத் தவிர (எதையும்) அதிகப்படுத்தவில்லை!
Tamil Translation - Abdulhamid Baqawi101. இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை தவிர்த்து அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்கவில்லை; மேலும், நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70