ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيْكَ مِنْهَا قَآئِمٌ وَحَصِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவை (நிராகரித்த சில) ஊர்(வாசி)களின் சரித்திரங்களில் உள்ளவை. இவற்றை உம் மீது விவரிக்கிறோம். இவற்றில் (சில மீதம்) நிற்கிறது; (சில முற்றிலும் வேர்) அறுக்கப்பட்(டு விட்)டது.
Tamil Translation - Omar Sharifஇவை, (நிராகரித்த) ஊர் (வாசி)களின் சரித்திரங்களிலிருந்து உள்ளவை ஆகும். இவற்றை உமக்கு விவரித்துக் கூறுகிறோம். இவற்றில் (மக்கள் எல்லாம் அழிந்து) முகடுகள் இடிந்து சுவர்கள் மட்டும் நிற்கின்ற ஊர்களும் உள்ளன; இன்னும், முற்றிலும் வேர் அறுக்கப்பட்(டு அடியோடு அழிக்கப்பட்)ட ஊர்களும் இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi100. (மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங்களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்து விட்டன.