caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 90

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:90

وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُۥ بَغْيًا وَعَدْوًا حَتَّىٰٓ إِذَآ أَدْرَكَهُ ٱلْغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِىٓ ءَامَنَتْ بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلْمُسْلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இறுதியாக, மூழ்குதல் அவனை பிடித்தபோது, அவன் “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டவனைத் தவிர வேறு இறைவன் அறவே இல்லை என்று நம்பிக்கை கொண்டேன்; நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று கூறினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி செய்தோம். ஆக, ஃபிர்அவ்னும் அவனுடைய இராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் (அநியாயம் செய்வதில்) எல்லை மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர். இறுதியாக, (கடலில்) அவன் மூழ்கியபோது, “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்ட (இறை)வனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை என்று நான் நம்பிக்கை கொண்டேன்; இன்னும், நான் முஸ்லிம்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்” என்று (ஃபிர்அவன்) கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70