هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يَسْمَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்களுக்கு இரவை நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும், பகலை (நீங்கள்) பார்க்கக்கூடியதாகவும் ஆக்கியவன். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் உங்களுக்கு இரவை, நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும்; இன்னும், பகலை பார்க்கக்கூடிய (வெளிச்சமுள்ள)தாகவும் ஆக்கினான். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஏராளமான) அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi67. நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே உருவாக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.