caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 68

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:68

قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًا سُبْحَٰنَهُۥ هُوَ ٱلْغَنِىُّ لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ إِنْ عِندَكُم مِّن سُلْطَٰنٍۭ بِهَٰذَآ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் சந்ததியை ஆக்கிக்கொண்டான் என்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியை விட்டு) தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா?
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் (தனக்கு) ஒரு குழந்தையை ஏற்படுத்திக் கொண்டான் என்று (சிலர்) கூறுகிறார்கள். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததிகளை விட்டு) மிகவும் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் (ஆதாரத்துடன்) அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக இட்டுகட்டி) கூறுகிறீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi68. அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறுகின்ற) உங்களிடத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இப்படி பொய்) கூறுகிறீர்களா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70