caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 66

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:66

أَلَآ إِنَّ لِلَّهِ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ وَمَا يَتَّبِعُ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ شُرَكَآءَ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி இணை (தெய்வங்)களை அழைப்பவர்கள் எதைப் பின்பற்றுகின்றனர்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை; அவர்கள் கற்பனை செய்பவர்களாகவே தவிர (ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை!
Tamil Translation - Omar Sharifஅறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும்; இன்னும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்விற்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு இணையாக கற்பனை செய்யப்பட்ட) தெய்வங்களிடம் பிரார்த்திப்பவர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (உறுதியான உண்மையை) பின்பற்றுவதில்லை. இன்னும், அவர்கள் (வீணான) கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையான ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை!
Tamil Translation - Abdulhamid Baqawi66. வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவற்றையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தைதவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70