caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:47

وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌ فَإِذَا جَآءَ رَسُولُهُمْ قُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் (அனுப்பப்பட்டார்). அவர்களுடைய தூதர் (மறுமையில்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (சென்று போன) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் இருந்தார். ஆக, அவர்களுடைய தூதர் (மறுமையில் அவர்களுக்கு முன்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70