وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உம் வாழ்விலேயே) உமக்கு காண்பிப்போம்; அல்லது (அதற்கு முன்) உம்மை கைப்பற்றிக் கொள்வோம். (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே. பிறகு, அல்லாஹ் அவர்கள் செய்தவற்றிற்கு சாட்சியாக இருப்பான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இன்னும், நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (தண்டனைகளில்) சிலவற்றை (அவர்கள் மீது இறக்கி உம் வாழ்விலேயே) உமக்குக் காண்பிப்போம்; அல்லது, (அதற்கு முன்) உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம். ஆக, (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்தவற்றிற்கு எல்லாம் அல்லாஹ் சாட்சியாளன் ஆவான். (அவர்களின் செயல்கள் அவனுக்கு மறைந்தவை அல்ல. ஆகவே, அவன் அவர்களுக்கு தகுந்த கூலி கொடுப்பான்.)
Tamil Translation - Abdulhamid Baqawi46. (நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உமது வாழ்க்கை காலத்திலேயே) நீர் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது (அவை வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்(த்துக் கொண்டே இரு)க்கிறான்.