وَمِنْهُم مَّن يَنظُرُ إِلَيْكَ أَفَأَنتَ تَهْدِى ٱلْعُمْىَ وَلَوْ كَانُوا۟ لَا يُبْصِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம் பக்கம் பார்ப்பவரும் அவர்களில் உண்டு. குருடர்களை அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் நீர் நேர்வழி செலுத்துவீரா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், உம் பக்கம் (உமது தெளிவான அத்தாட்சிகளை கண்களால்) பார்ப்பவரும் அவர்களில் உண்டு. (ஆனால், அவர்கள் அவற்றை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.) ஆக, குருடர்களை, - அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் - நீர் நேர்வழி செலுத்துவீரா? (அது உம்மால் முடியுமா?)
Tamil Translation - Abdulhamid Baqawi43. உம்மைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உம்மை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) எதையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?