وَمَا كَانَ هَٰذَا ٱلْقُرْءَانُ أَن يُفْتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ ٱلْكِتَٰبِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தி, (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. இதில், (இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறக் கூடியதாகவும் இருக்கிறது. அகிலங்களின் இறைவனிடமிருந்து இ(து இறக்கப்பட்டது என்ப)தில் அறவே சந்தேகமில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi37. இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.