وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهِۦ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَهُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை அடையச் செய்கிறான். அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (யாரும்) இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் (உம்மை விட்டும்) அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (யாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை கொடுக்கிறான். இன்னும், அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன்.
Tamil Translation - Abdulhamid Baqawi107. அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.