caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 108

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:108

قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِوَكِيلٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை (வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. எவர் (அதன் படி) நேர்வழி சென்றாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெட்டாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்குக் கேடாகத்தான். நான் உங்கள் மீது பொறுப்பாளனாக இல்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. ஆக, எவர் (இதை நம்பிக்கைக் கொண்டு) நேர்வழி நடப்பாரோ அவர் நேர்வழி நடப்பதெல்லாம் அவரது நன்மைக்காகவே. இன்னும், எவர் (அதை நம்பிக்கை கொள்ளாமல்) வழிகேட்டில் செல்வாரோ அவர் வழிகேட்டில் செல்வதெல்லாம் அவருக்கு கேடாகத்தான். இன்னும், நான் உங்கள் மீது பொறுப்பாளனாக (உங்களை கண்காணிப்பவனாக) இல்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi108. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70