caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 90

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:90

وَجَآءَ ٱلْمُعَذِّرُونَ مِنَ ٱلْأَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகிராமவாசிகளில் புகல் கூறுபவர்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு (புகல் கூறி) வந்தார்கள், அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கோராமல்) உட்கார்ந்தார்கள். இவர்களில் நிராகரித்தவர்களை துன்புறுத்தும் வேதனை அடையும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கிராம அரபிகளில் சாக்கு போக்கு கூறுபவர்கள் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்காக வந்தார்கள். இன்னும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பாதவர்கள் (அனுமதி கோராமல் தங்கள் இல்லங்களில்) உட்கார்ந்து விட்டார்கள். நிராகரித்த இவர்களை துன்புறுத்தும் தண்டனை வந்தடையும்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதிகோரி (உங்களிடம்) வந்து காரணம் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70