caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 80

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:80

ٱسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! அல்லது அவர்களுக்காக மன்னிப்புத் தேடாதீர்! அவர்களுக்காக நீர் எழுபது முறை மன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். அதற்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; அல்லாஹ், பாவிகளான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! அல்லது அவர்களுக்காக மன்னிப்புத் தேடாதீர்! அவர்களுக்காக நீர் எழுபது முறை மன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்தனர் என்பதாகும். அல்லாஹ், (தனது கட்டளைகளை மீறுகின்ற) பாவிகளான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi80. (நபியே!) நீர் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீர் எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70