caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 79

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:79

ٱلَّذِينَ يَلْمِزُونَ ٱلْمُطَّوِّعِينَ مِنَ ٱلْمُؤْمِنِينَ فِى ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ ٱللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களில் இருந்து தர்மங்களில் உபரியாக (தர்மம்) செய்பவர்களையும் (தர்மம் புரிய) தங்கள் உழைப்பைத் தவிர (செல்வம் எதையும்) பெறாதவர்களையும் இவர்கள் குறை கூறுகின்றனர் (குத்திப் பேசுகின்றனர்). இன்னும் அல்லாஹ் அவர்களை கேலிசெய்கிறான். துன்புறுத்தக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Omar Sharif(நயவஞ்சக்காரர்களான) அவர்கள், உபரியாக தர்மம் செய்கின்ற நம்பிக்கையாளர்களையும் (தர்மம் புரிய) தங்கள் உழைப்பைத் தவிர (செல்வம் எதையும்) பெறாதவர்களையும் (அவர்கள் செய்கின்ற) தர்மங்கள் விஷயத்தில் குறை கூறி குத்திப் பேசுகிறார்கள். இன்னும் அவர்களை கேலி செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். இன்னும் துன்புறுத்தக்கூடிய தண்டனையும் அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi79. அவர்கள் நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றியும் (குறிப்பாக,) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் குற்றம் கூறி அவர்களைப் பரிகசிக்கின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களை அல்லாஹ் பரிகசிக்கிறான். மேலும், (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70