caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 64

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:64

يَحْذَرُ ٱلْمُنَٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيْهِمْ سُورَةٌ تُنَبِّئُهُم بِمَا فِى قُلُوبِهِمْ قُلِ ٱسْتَهْزِءُوٓا۟ إِنَّ ٱللَّهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கை கொண்ட) அவர்கள் மீது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு அறிவித்துவிடுவதை நயவஞ்சகர்கள் (போலியாக) பயப்படுகின்றனர். கூறுவீராக: “பரிகசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்குபவன் ஆவான்.”
Tamil Translation - Omar Sharifநயவஞ்சகர்கள், அவர்களைப் பற்றி ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு, அது அவர்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நம்பிக்கையாளர்களுக்கு அறிவித்துவிடுவதைப் பயப்படுகிறார்கள். (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: “கேலிசெய்து கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் (நபிக்கு) வெளியாக்குவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi64. நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறும்: ‘‘நீங்கள் பரிகசித்துக் கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70