وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌ نَّظَرَ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ هَلْ يَرَىٰكُم مِّنْ أَحَدٍ ثُمَّ ٱنصَرَفُوا۟ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறியாத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை திருப்பிவிட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி சென்று விடுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிய முயற்சிக்காத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை (நம்பிக்கை கொள்வதிலிருந்து) திருப்பி விட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi127. (புதிய) அத்தியாயம் ஒன்று அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) ‘‘உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?'' என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான்.