أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِى كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகும் அவர்கள் திருந்தவில்லை; அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை.
Tamil Translation - Omar Sharifஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? பிறகும், அவர்கள் திருந்துவதுமில்லை. இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi126. ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் சிரமத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விட்டுவிடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.