وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌ فَمِنْهُم مَّن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَٰذِهِۦٓ إِيمَٰنًا فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَزَادَتْهُمْ إِيمَٰنًا وَهُمْ يَسْتَبْشِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கின்றனர். ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களோ, அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்களோ மகிழ்ச்சியடைகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கிறார்கள். ஆக, நம்பிக்கை கொண்டவர்கள் அவர்களோ (இறக்கப்பட்ட அத்தியாயத்தைக் கொண்டு) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது.
Tamil Translation - Abdulhamid Baqawi124. ஒரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் ‘‘உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?'' என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.